மது விற்ற 2 பேர் கைது

ஈரோடு, ஜன.21: அந்தியூர் அடுத்துள்ள சிவசக்திநகர் சுடுகாடு அருகில் மது விற்பனை நடைபெறுவதாக அந்தியூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்ஐ வருணியா தலைமையிலான போலீசார் அங்கு சோதனையிட்ட போது மது விற்பனையில் ஈடுபட்டிருந்த அந்தியர் நேருநகரை சேர்ந்த பால்ராஜ் (45) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஏராளமான மது பாட்டில், ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோல், வரப்பாளையம் கொட்டகாட்டுபாளையத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட ராயர்பாளையம் சோளக்காடு பகுதியை சேர்ந்த குமாரசாமி (40) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: