வாக்காளர் சேர்ப்பு முகாம்களில் 28,400 விண்ணப்பம் பெறப்பட்டன

ஈரோடு, ஜன.21: இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 23ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4ம் தேதி, 5ம் தேதி மற்றும் 11, 12ம் தேதிகளில் 2 ஆயிரத்து 213 வாக்குசாவடிகளில் 912 மையங்களில் சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. பெயர் சேர்க்க படிவம் எண் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் எண் 7, முகவரி, பெயர், புகைப்பட திருத்தம் செய்ய படிவம் 8, முகவரி மாற்றத்திற்கு படிவம் 8ஏ என விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர். இரண்டு சிறப்பு முகாம்களில் மொத்தம் 28 ஆயிரத்து 400 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில், 3,000 விண்ணப்பங்கள் பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம், தொகுதி மாற்றம் உள்ளிட்டவைகளுக்காக பெறப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள மனுக்கள் புதிய வாக்காளர்கள் தொடர்பாக பெறப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: