×

பெரியவலசு நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை

ஈரோடு, ஜன.21: ஈரோடு பெரியவலசு நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.தென்னரசு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 9ம் தேதி சட்ட பேரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எனது தொகுதிக்குட்பட்ட பெரியவலசு நடுநிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அந்த நிதி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு உரிய அனுமதி அளிக்க வேண்டும். அதேபோல், தமிழகம் முழுவதும் நூலகங்கள் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. நூலகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு பெரியவலசு நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நூலகத்திற்கு நிதி ஒதுக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. இதற்கான அனுமதியும் விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதற்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

Tags : school middle school ,
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை