குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக பாஜவினர் துண்டு பிரசுரம் விநியோகம்

ஈரோடு, ஜன.21: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில் பாஜவினர் மக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்தத்தினை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் பாஜவினர் குடியுரிமை சட்டத்திருத்தத்தில் உள்ள சாதகங்களை மக்களிடம் விளக்கி துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர். அதன்படி, ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் நேற்று மாலை பாஜவினர் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து வணிகர்களிடமும், மக்களிடமும் துண்டு பிரசுரம் வழங்கினர். அதில், குடியுரிமை சட்ட திருத்த சட்டத்தில் இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இச் சட்டம் 1955ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியினரால் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல.

Advertising
Advertising

இந்த சட்டம் யாருடைய குடியுரிமையும் பறிப்பதற்கான சட்டம் அல்ல. சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் வருபவர்களுக்கு குடியுரிமை கிடைக்காது. இலங்கை தமிழ் அகதிகளில் கருத்துக்களை, விருப்பங்களை கேட்டு குடியுரிமை வழங்கும் நடவடிக்கை என்பது வேறு, இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா நோக்கம் வேறு என்ற வாசகங்கள் எழுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச்செயலாளா் குணசேகரன், மாநில துணைத்தலைவர் சிவகாமி, பிரசார அணி சரவணன், மாவட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட மகளிர் தலைவி ரேவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: