×

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து போராடிய அரசியல் கட்சி தலைவர்கள் மீது வழக்கு

பட்டுக்கோட்டை, ஜன. 21: பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூரில் கடந்த 17ம் தேதி குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய அரசியல் கட்சி தலைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி அனுமதியின்றி சட்டவிரோதமாக ஒன்று கூடி, பொதுப்பாதையை வழிமறித்து மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக உரை நிகழ்த்தியதாக மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணை பொது செயலாளர் ராவுத்தர்ஷா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில இளைஞர் பொது செயலாளர் பவாஸ்கான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைமை கழக பேச்சாளர் பழனி பாரூக், எஸ்டிபிஐ மாநில பொது செயலாளர் நிஜாமுகைதீன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திருச்சி வேலுச்சாமி, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனர் குடந்தை அரசன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மற்றும் பலர் மீது மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : leaders ,party ,
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...