அண்ணா கலைக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

காரைக்கால், ஜன. 21: மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி காரைக்காலில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி காரைக்கால் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இத்தகவல் அறிந்த காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் மறியலை கைவிடுமாறு பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதை
யடுத்து, மறியலில் ஈடுபட்ட 68 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Anna Art Gallery ,road ,
× RELATED பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சி