×

256 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி, ஜன. 21:கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தின பொதுமக்கள் குறைகேட்புகூட்டம் நேற்று நடத்தது. கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிரண்குராலா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, தனி துணை ஆட்சியர் (சமூக நலபாதுகாப்பு திட்டம்) சரவணன், மாவட்ட திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலம்) பிரகாஷ்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வழங்கினர்.

குறைகேட்பு கூட்டம் வெளியே தனியாக பந்தல் அமைத்து அமர வைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக சென்று ஆட்சியர் மனுக்களை பெற்றார். பின்னர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்கள் மீது உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் 256 மனுக்கள் பெறப்பட்டது. இதில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.    

Tags : Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...