போலியோ சொட்டு மருந்து வழங்கல்

ரிஷிவந்தியம், ஜன. 21: ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ரிஷிவந்தியம், வாணாபுரம், சீர்ப்பனந்தல், மணிமுக்தா அணை உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் இயங்கி வரும் துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையம், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ரிஷிவந்தியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமில் ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் சரஸ்வதி தலைமையில் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தார். இதில், மருத்துவர்கள் திவ்யா, கீதா, ஜெயபால், அஜிமல், தீபிகா, சுகாதார ஆய்வாளர் தெய்வீகன், செவிலியர் இந்திரா உள்ளிட்ட தன்னார்வலர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்துகொண்டு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Tags :
× RELATED மருத்துவக்கழிவுகள் மேலாண்மை...