ஹெல்மெட் பேரணியை ஆட்சியர்கள் துவக்கி வைத்தனர்

விழுப்புரம், ஜன. 21:    விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த சாலைபாதுகாப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர்கள் அண்ணாதுரை, கிரண்குராலா ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழகத்தில் 31வது சாலைபாதுகாப்பு வாரவிழா நேற்று முதல் வரும் 27ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சாலைபாதுகாப்பு குறித்தவிழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் வாகனஓட்டிகளுக்கான இலவச பரிசோதனை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. அதன் முதல் நாளான நேற்று விழுப்புரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 31வது சாலைபாதுகாப்பு வாரவிழாவையொட்டி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த மகளிருக்கான விழிப்புணர்வு பேரணி பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கியது. ஆட்சியர் அண்ணாதுரை கலந்துகொண்டு பேரணியை துவக்கி வைத்தார். எஸ்பி ஜெயக்குமார், வட்டாரப்போக்குவரத்து அலுவலர் விழுப்புரம் பாலகுருநாதன், திண்டிவனம் முருகேசன், கூடுதல் எஸ்பி சரவணக்குமார், வட்டாரப்போக்குவரத்து ஆய்வாளர்கள் பெரியசாமி, நவீன்ராஜ், முத்துக்குமார், டிஎஸ்பிக்கள் சங்கர், ராஜன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, கள்ளக்குறிச்சியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தலைமை தாங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். பின்னர் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி சாலை விதிகளை பின்னபற்ற வேண்டும் என கேட்டுகொண்டார். அதனை தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஆட்சியர் ஹெல்மெட் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரன், உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் வரவேற்றார். பேரணியானது தியாகதுருகம் சாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு வரை ஊர்வலமாக சென்றனர். கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பார்த்திபன், உதவி ஆய்வாளர் தர்மராஜ் மற்றும் பொதுமக்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: