×

மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பு வரவேற்பு

திட்டக்குடி, ஜன. 21: திருச்சியில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற திமுகவினர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பின்னர் விழுப்புரத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு சென்றார். அப்போது ராமநத்தம் அருகே ஆவட்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினரும், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான கணேசன் தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பட்டூர் அமிர்தலிங்கம், செங்குட்டுவன், சின்னசாமி, பாவாடை கோவிந்தசாமி, வேல்முருகன், கோவிந்தசாமி, பண்ருட்டி ஒன்றிய குழு தலைவர் சபா.பாலமுருகன், நெய்வேலி நகர செயலாளர் பக்கிரிசாமி, விருத்தாசலம் நகர செயலாளர் தண்டபாணி, திட்டக்குடி நகர செயலாளர்கள் பரமகுரு, பெண்ணாடம் நகர செயலாளர் குமரவேல், ஒன்றிய கவுன்சிலர் சுகுணா சங்கர், மாவட்ட கவுன்சிலர்கள் சக்தி வினாயகம், செல்வி ராஜரத்தினம், செல்வி அமிர்தலிங்கம், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், ஊராட்சி செயலாளர்கள் கலைவாணன், தியாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : MK Stalin ,
× RELATED மாவட்ட எல்லையில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு