விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம், ஜன. 21:கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ஆலிச்சிக்குடி கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் வசிக்கும் ஒருவர் தனது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும், கோயில் திருவிழா, பொங்கல் விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கிராமத்தில் நடக்கும் பொது நிகழ்ச்சிகளை தடுப்பதற்காக பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதும், அவருடைய கருத்துக்கு ஒத்துப்போகாத குடும்பங்களை தாக்குவது உள்ளிட்ட செயல்களை நடத்தி வருபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணன் தலைமையில் நேற்று விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர்.

அப்போது சார் ஆட்சியர் இல்லாததால் அலுவலகத்தின் முன் நின்று கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து அங்கு வந்த விருத்தாசலம் தாசில்தார் கவியரசு பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தாசில்தாரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : Demonstration ,Office ,Collector ,
× RELATED திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன் ...