வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

சின்னசேலம், ஜன. 21: சின்னசேலம் அருகே இந்திலி காந்தி நகரை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் சரத்பாபு(30). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கந்தவேல்(38) என்பவருக்கும் அவரவர் பகுதியில் சிறுவர்களுக்கான விளையாட்டு நடத்துவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு 7மணியளவில் மாரியம்மன் கோயில் அருகில் சரத்பாபு சிறுவர்களுக்கான விளையாட்டு நடத்திக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது அதே ஊரைச்சேர்ந்த கந்தவேல், ராசேந்திரன், வர்கீஸ், மனோபாலா ஆகியோர் அங்கு தகராறு செய்ததாக தெரிகிறது.  அதை தட்டிக்கேட்ட சரத்பாபு மற்றும் அவரது மாமா சேகர், மாமனார் முத்துகிருஷ்ணன் ஆகிய 3பேரையும் கந்தவேல் தரப்பினர் கல்லால் தாக்கி உள்ளனர். இதில் சரத்பாபு உள்ளிட்ட 3பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து சரத்பாபு புகாரின் பேரில் சின்னசேலம் சப்- இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் கந்தவேல் உள்ளிட்ட 4பேர் மீது வழக்கு பதிவு செய்து கந்தவேல்(38), மேலூரை சேர்ந்த வர்கீஸ்(36) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags :
× RELATED போக்குவரத்துக்கு இடையூறு 2 வாலிபர்கள் கைது