முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

சிதம்பரம், ஜன. 21: சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகரில் மீனாட்சி துவக்கப்பள்ளி மற்றும் ராணி சீதை ஆச்சி பள்ளிகள் உள்ளது. பழமையான இந்த பள்ளியில் 1981ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. முதலில் துவக்கப்பள்ளியிலும், பின்னர் உயர்நிலைப்பள்ளியிலும் படித்த மாணவர்கள் ஒன்றாக சந்தித்து கொண்டனர். அப்போது அவர்கள் 35 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்த போது நடந்த சம்பவங்களையும், தாங்கள் வகுப்பில் அமர்ந்திருந்த இடங்களையும் பார்த்து பழைய நினைவுகளை அசை போட்டனர். மாணவர்கள் ஒவ்வொருவரும் வகுப்பு ஆசிரியர்களிடம் படித்த கல்வியையும் எண்ணி பெருமிதம் அடைந்தனர்.

35 ஆண்டுகளுக்கு பின்பு நடந்த இந்த சந்திப்பு நிகழ்ச்சி, மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற  முன்னாள் ஆசிரியர்கள் மணிவாசகம், தர்பாரண்யன்,  முத்துக்குமாரசுவாமி, அசோக்குமார், தற்போதைய ஆசிரியர்கள் பாஸ்கர், சாந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி, நினைவு பரிசுகளையும் வழங்கினர்.

Tags :
× RELATED அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி