மாரியம்மன் கோயிலில் கொள்ளை முயற்சி

பண்ருட்டி, ஜன. 21: பண்ருட்டி அருகே சிறுவத்தூர் கிராமத்தில் மணலூர் மாரியம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் கடந்த சில ஆண்டிற்கு முன்புதான் சீரமைப்பு பணி செய்யப்பட்டிருந்தது. கோயிலில் மாரியம்மன், ஐயப்பன் உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகள் உள்ளன. அப்பகுதி மக்கள் ஐதீக முறைப்படி அபிஷேகம், வழிபாடு செய்து வந்துள்ளனர். ஐயப்ப பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். கோயில் பூசாரி சிவகண்ட அய்யனார் கோயிலில் தினந்தோறும் அபிஷேகம், அர்ச்சனை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பூசாரி கோயிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். வழக்கம்போல் நேற்று காலை கோயிலில் வந்து பார்த்தபோது கதவுகள் உடைந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்மநபர்கள் உள்ளே புகுந்து சாமி சிலைகளை எடுத்துச்செல்ல முயன்றபோது சிலை கீழே விழுந்து சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடியது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : robbery ,Mariamman temple ,
× RELATED சுருக்குமடி வலை பயன்படுத்தினால் நலத்திட்ட உதவிகள் ரத்து