இளமையாக்கினார் கோயிலில் திருவோடு கொடுக்கும் நிகழ்ச்சி

சிதம்பரம், ஜன. 21: சிதம்பரத்தில் இளமையாக்கினார் கோயில் உள்ளது.  இக்கோயிலில் யவனாம்பாள் சமேத யவனேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்.  இக்கோயிலின் உற்சவ விழா மற்றும் திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா கடந்த  சில தினங்களுக்கு முன்பு துவங்கி நடந்து வந்தது. விழாவின் முக்கிய  நிகழ்ச்சியாக சிவபெருமான் யோகி வடிவத்தில் திருநீலகண்ட நாயனாருக்கு  திருவோடு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இளமையாக்கினார் கோயில்  குளக்கரையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி  தரிசனம் செய்தனர்.

Tags : Thiruvodam ,ceremony ,
× RELATED பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன்...