வடக்குத்து பேருந்து நிலையம் எதிரில் கண்காணிப்பு கேமரா

நெய்வேலி, ஜன. 21: நெய்வேலி நகர காவல் நிலையம், சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வடக்குத்து பேருந்து நிலையம் எதிரில் வடக்குத்து ஊராட்சி மன்ற துணை தலைவர் சடையப்பன் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டது. நெய்வேலி டிஎஸ்பி லோகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கேமராக்களை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம், வடக்குத்து ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலி குப்புசாமி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகன், ஊராட்சி செயலாளர் மணிவாசகம், தனிப்பிரிவு காவலர் சங்குபாலன், பொறியாளர் நெடுஞ்செழியன் மற்றும் வடக்குத்து வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : North Bus Station ,
× RELATED இந்து முன்னணி கூட்டம்