×

திருப்பூரில் நகைச்சுவை திருவிழா

திருப்பூர், ஜன.20:திருப்பூர் நகைச்சுவை மன்றத்தின் சார்பில் நகைச்சுவை திருவிழா நேற்று நடைபெற்றது.விழாவிற்கு திருப்பூர் தமிழ்சங்க தலைவர் முருகநாதன் தலைமை வகித்தார். ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் நாகராஜன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் மனோபாலா பேசினார். ‘பேசும் பூங்காற்று’ என்ற தலைப்பில் கவிதா ஜவகர் உரையாற்றினர். இதில் கிளாசிக் போலோ உரிமையாளர் சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி, பெரியவர்களுக்கான பலூன் ஊதும் போட்டி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  தப்பாட்டம், கரகாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags : Comedy Festival ,Tirupur ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்