×

சிறார் ஆபாச படம் பார்ப்போர் பட்டியல்

கோவை, ஜன.20:  கோவை மாவட்டத்தில் சிறார் ஆபாச படம் பார்ப்பவர்கள், பதிவிறக்கும் செய்து அனுப்புவோர் விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிறார் ஆபாச படம் பார்ப்பது, வலை தலங்களில் பதிவிறக்கம் செய்து பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றில் அனுப்புவது குற்றமான செயல் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சிறார் ஆபாச படங்களை அனுப்புவோர் தொடர்பாக கோவை மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த வாரம் கருமத்தம்பட்டியை சேர்ந்த டிரைவர் மற்றும் பொள்ளாச்சியி–்ல் வசித்து வந்த வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தங்களது செல்போனில் சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தங்களது நண்பர்களுக்கு அனுப்பியது தெரியவந்தது.

மேலும் இதுபோல் சிறார் ஆபாச படங்களை பார்ப்பவர்கள், சமூக வலை தளங்களில் பகிர்வோர் இருப்பதாக புகார் வந்தது. கடந்த மாதம் இது தொடர்பாக 45 பேர் பட்டியலை தயார் செய்து போலீசார் விசாரணை நடத்தினர். தற்போது மேலும் 40 பேரின் பெயர் பட்டியலை போலீசார் சேகரித்துள்ளனர். ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்