×

ஊட்டி - கோத்தகிரி சாலையில் குறுகலான வளைவு பகுதிகளில் விரிவாக்கம்

ஊட்டி, ஜன. 20: ஊட்டி - கோத்தகிரி சாலையில் மேல்கோடப்பமந்து பகுதியில் குறுகலான வளைவு பகுதிகளில் விபத்துகளை தவிர்க்கும் வண்ணம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுபாளையம் உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு செல்ல சாலை உள்ளது. நீலகிரி மாவட்டத்தை மாற்ற மாவட்டங்களுடன் இணைக்கும் மாற்று பாதையாகவும் இச்சாலை விளங்கி வருகிறது. இச்சாலையில் மேல்கோடப்பமந்து முதல் தொட்டபெட்டா சந்திப்பு வரை பல இடங்களில் சாலை குறுகிய வளைவுகளை கொண்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட கூடிய அபாயம் இருந்து வந்தது.

இதை ெதாடர்ந்து சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இப்பகுதியில் குறுகலாக இருந்த இடங்களில் பக்கவாட்டு மண் திட்டுகள் இடித்து சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் தடுப்புசுவர்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags : areas ,road ,Kotagiri ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்