×

காரியாபட்டி அருகே கழிவுநீர் கால்வாயான நீர்வரத்துக் கால்வாய் கண்மாய்க்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்

காரியாபட்டி, ஜன. 20: காரியாபட்டி அருகே, தோப்பூர் கண்மாய்க்கு தண்ணீர் வரும் வரத்துக் கால்வாயை தூர்வாராததால், கண்மாய்க்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.காரியாபட்டி ஒன்றியத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் கம்பிக்குடி, பாப்பணம், சத்திரபுளியங்குளம், முடுக்கன்குளம் ஆகிய கண்மாய்கள் உள்ளன. மழை பெய்தால் கம்பிக்குடி பெரியகண்மாய் நிரம்பி, அதன்பின் பாப்பணம் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும். இக்கண்மாய் நிரம்பி அடுத்த கண்மாய்க்கு செல்லும். இவ்வாறு முடுக்கன்குளம், சத்திரபுளியன்குளம் கண்மாய் வரை தண்ணீர் செல்ல வரத்துக் கால்வாய் உள்ளது.


காரியாபட்டி அருகே, தோப்பூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் உள்ளது. இக்கண்மாய் மூலம் சுமார் ஆயிரம் பாசன வசதி பெறும். இக்கண்மாய்க்கு தெற்காற்றின் வழியாக நீர்வரத்து உள்ளது.கடந்த பத்து ஆண்டுகளாக, இந்த வரத்து கால்வாய் தூர்வாரப்படாமல் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால், மழை பெய்தாலும், கால்வாய் வழியாக தண்ணீர் வருவதில்லை. இதனால், இப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. மேலும், காரியாபட்டி பேரூராட்சியின் ஒட்டு மொத்த கழிவுநீரும் இந்த கால்வாயில் விடப்படுகிறது. மேலும், கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகத்திற்காக, கண்மாயில் 5 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கிடப்பில் போடப்பட்ட நிலையூர் கால்வாய் திட்டம்:காரியாபட்டி பகுதியில் நிலத்தடி நீராதாரத்தை பெருக்க, கம்பிக்குடி-நிலையூர் கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் மூலம்கம்பிக்குடியில் 7 ஆயிரம் ஏக்கர், பாப்பணத்தில் 2 ஆயிரம் ஏக்கர் உட்பட 10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். இந்த திட்டத்தை நிறைவேற்ற காலதாமதம் செய்வதால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்மாய்களிலும் நீர்மட்டம் குறைந்துள்ளது. விடுத்துள்ளனர்.


Tags : Kariyapatti ,sewer canal ,
× RELATED காரியாபட்டி நகரில் தேங்கி கிடக்கும்...