கள் இறக்கி சந்தைப்படுத்துவது நாளை முதல் விரிவு படுத்தப்படும்

காங்கயம், ஜன. 20: திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் நல்லசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முழுவதும் நாளை முதல் திட்டமிட்டபடி கள் இறக்கி சந்தைப்படுத்துவது விரிவுபடுத்தப்படும். அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை, கள் இறங்குவதும் பருகுவதும். அந்த அடிப்படையில் ஆங்காங்கே அமைதியாக தமிழக முழுவதும் வாய்ப்பு இருக்கிற இடங்களில் கள் இறக்கி சந்தைப்படுத்துவது தீவிரப்படுத்தப்படும். தமிழ்நாட்டில் முப்பதாண்டுகளுக்கு மேலாக கள் தடை தொடர்வது அரசியல் சட்டத்திற்கு எதிரானது, உலக நடைமுறைக்கு எதிரானது. இந்த அரசாங்கம் இதை உணர்ந்து இருக்கின்றது விரைவில் கள்ளுக்கு வைத்திருக்கக்கூடிய தடையை நீக்கி அறிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு நல்லசாமி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: