×

பல்லாரி விலை ஒரளவு சரிந்தாலும் சின்ன வெங்காயம் விலை `கிடுகிடு’

தேனி, ஜன. 20: தேனி மாவட்டத்தில் பல்லாரி வெங்காயத்தின் விலை சரிந்தாலும், சின்ன வெங்காயம் விலை மீண்டும் 200 ரூபாயை எட்டி உள்ளது.தேனி மாவட்டத்தில் பல்லாரி வெங்காயமும், சின்ன வெங்காயமும் கிலோ 200 வரை விலை குறைந்தது. வெங்காயத்தின் விலையை குறைக்க மத்திய அரசு பல்லாரி வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தேனி மாவட்டத்திற்கு இதுவரை வந்து சேரவில்லை. இருப்பினும் மற்ற பகுதிகளில் தட்டுப்பாடு குறைந்ததால் தேனி மாவட்டத்தி–்ல் பல்லாரி வெங்காயம் முதல் தரம் கிலோ 60 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ 50 ரூபாய் என குறைந்தது. மூன்றாம் தரம் கிலோ 35 ரூபாய் வரை இறங்கி விட்டது.ஆனால், சின்ன வெங்காயம் விலை தேனி உழவர்சந்தையிலேயே கிலோ 135 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுகுறித்து சந்தை அதிகாரிகள் கூறியதாவது: திருச்சி மார்க்கெட்டிலும், தேனி மொத்த மார்க்கெட்டிலும் சின்ன வெங்காயம் கிலோ 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அவர்களிடம் வாங்கும் சிறு வியாபாரிகள் சில்லரை விலையில் கிலோ 200 ரூபாய்க்கு விற்கின்றனர்.

உழவர்சந்தையில் விவசாயிகள் அதிகபட்சமாக கிலோ 135 ரூபாய்க்கு விற்கின்றனர். இதனால் உழவர்சந்தை விவசாயிகளுக்கு வெங்காயத்தை பொறுத்தவரை விற்பனையில் இழப்பே ஏற்படுகிறது. மற்ற காய்கறிகளில் இருந்து வரும் வருவாய் மூலம் இந்த இழப்பினை ஈடுகட்டிக் கொள்கின்றனர். சந்தை செயல்பட தொடங்கி 20 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், முதன் முறையாக சின்ன வெங்காயம் விலை ஒரு கிலோ 150 ரூபாய் என பதிவாகி உள்ளது. ஆனாலும், வெளிமார்க்கெட்டில் கிலோ 200 ரூபாய் என்பதால் பொதுமக்கள் உழவர்சந்தை வியாபாரிகளிடம் வந்தே வெங்காயம் வாங்குகின்றனர். இவ்வாறு கூறினர்.

Tags :
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?