புத்தா அறக்கட்டளை துவக்க விழா

ஈரோடு, ஜன. 20: ஈரோட்டில் புத்தா கல்வி மற்றும் சமூகநல அறக்கட்டளை துவக்க விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, அறங்காவலர் பிரபுதேவா தலைமை தாங்கினார். தர்சினி பிருந்தாபிரபு குத்துவிளக்கேற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் சண்முகவேல், தி.மு.க நிர்வாகி வழக்கறிஞர் ரமேஷ்குமார், தமிழர் கழக தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசினர். நிர்வாக அறங்காவலர் ராஜ்குமார், காப்பாளர் சங்கீதா, மாவட்ட செயலாளர் கதிரவன், வழக்கறிஞர் அய்யப்பன், சவுகத்அலி, கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: