நெல்கொள்முதல் நிலையம் வருமா?

மானாமதுரை, ஜன.20:  விவசாய சங்க மாநில துணைத்தலைவர் ராமமுருகன் கூறுகையில், மானாமதுரை வட்டாரத்தில் 20 ஆயிரம் ஏக்கரில் நெல்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இங்கு நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவில்லை. செய்களத்தூர் பகுதியில் விளைந்த நெல்மூட்டைகளை அவசர தேவைக்காக சில விவசாயிகள் வியாபாரிகளிடம் 65 கிலோ நெல் மூடையை ரூ.700க்கு விற்று வருகின்றனர். இதனால், வியாபாரிகள் லாபமடைந்து வருகின்றனர். அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டால் விவசாயிகள் சேமித்து வைத்துள்ள தங்களது நெல்லை 65 கிலோ நெல்மூடையை ரூ.1200க்கு விற்க முடியும் என்றார்.

Tags : paddy purchasing station ,
× RELATED தீயணைப்பு துறையினர் அணைத்தனர்...