சேவல் சூதாட்டம் 5 பேர் கைது

திருப்பூர், ஜன.20:  திருப்பூர் அங்கேரிபாளையம் அருகில் உள்ள பகுதியில் அனுப்பர்பாளையம் போலீசார் நேற்று முன் தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சேவல்களை சண்டையிட சூதாட்டத்தில் ஈடுபட்ட காந்தி நகர் இ.பி. காலனி பகுதியை சேர்ந்த மருதுபாண்டி (32) உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 சேவல் மற்றும் ரூ. 2454 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் சேவல் சண்டையிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: