இந்து இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டுவிழா

ஈரோடு, ஜன. 20:   ஈரோடு அருகே உள்ள வி.கே வலசு பகுதியில் இந்து இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு பள்ளியின் பொருளாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். இதில் விஜயாபாலுசாமி, மஞ்சுளா, வித்யாசாகர், கீதா, அருண்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். பள்ளியின் தலைவர் மற்றும் தாளாளர் பாலுசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கோப்பை வழங்கி பேசினார். இதையொட்டி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், இணைச்செயலாளர் மாணிக்கம், துணை தலைவர் முருகேசன், செயலாளர் மணி, இயக்குனர் பிரதீப்குமார், முதல்வர் ஏனடி, இந்துக்களின் நிலையம் மெட்ரிக் பள்ளி முதல்வர் காந்திமதி, துணை முதல்வர் மணி, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியர்கள் உஷாராணி, பங்கஜம் மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: