பல் மருத்துவர் சங்க தொடக்க விழா

சிவகங்கை, ஜன.20:  சிவகங்கையில் இந்திய பல் மருத்துவ சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பல் மருத்துவ சங்க கிளை தொடக்க விழா மற்றும் கருத்தரங்கு நடந்தது. மாவட்டத்தலைவர் பெர்க்மான்ஸ் வரவேற்றார். மாநில தலைவர் பாஸ்கர், மாநில செயலாளர் செந்தாமரைகண்ணன் கருத்தரங்கை தொடங்கி வைத்தனர். நிர்வாகிகள் ராஜ்குமார், உமாசங்கர், மீனாட்சிசுந்தரம், ஜெயசம்பத்குமார் முன்னிலை வகித்தனர். சென்னை பல் சிகிச்சை நிபுணர் செந்தில்குமார் பல் சிதைவு, குழந்தைகள் பற்களை பாதுகாத்தல், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து பேசினார்.

மாநில இணை செயலாளர் சந்திரமோகன், துணை நிர்வாகிகள் கலைச்செல்வன், சரவணன், குருராஜ், கண்ணபெருமாள், மணிவண்ணன், பிரதீப், அருள்அரசு, பிரபாகர்ராஜா ஆகியோர் கருத்தரங்கு அமர்வில் பல்வேறு தலைப்புகளில் பேசினர். மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். இவ்விழாவில் மாவட்ட தலைவர்(தேர்வு) முகம்மதுஅசார், நிர்வாகிகள் ஆர்த்தி, தாமரைசெல்வம், நிவேதா, கமலா மற்றும் பல் மருத்துவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Dental Association ,
× RELATED வாகன ஓட்டிகள் அவதி அரசு கல்லூரி மாணவர்களின் என்எஸ்எஸ் முகாம் துவக்கம்