×

காளையார்கோவிலில் சொட்டு மருந்து வழங்கல்

காளையார்கோவில், ஜன.20:  காளையார்கோவிலில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.காளையார்கோவில் சுப்ரீம் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ பாதிப்பு இல்லாத இந்தியாவை உருவாக்க போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் காளையார்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. தொடர்ந்து பேருந்து நிலையம், இந்தியன் வங்கி அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களிலும் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் போஸ் தலைமை வகித்தார்.  நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர்கள் மோகன், ஞானப்பிரகாசம், சங்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர்கள் ஸ்ரீ விவேக், ராகவேந்திரா கலந்து கொண்டு ஐந்து வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கினர். ரோட்டரி சங்க செயலாளர் அருள்சாமி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதில் ஆர்வம் காட்டினர்

Tags : Kaliyarikovil ,
× RELATED திருவள்ளூர் செய்தி துளிகள்