பிளாஸ்டிக் புழக்கம் அதிகரிப்பு உறங்கும் உள்ளாட்சி நிர்வாகம்

காரைக்குடி, ஜன.20: காரைக்குடி கிராம பகுதிகளில் பிளாஸ்டிக் புழக்கம் அதிகரித்துள்ளது.ஒருமுறையே பயன்படுத்தி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது கடினம். இவை மழைநீரை நிலத்திற்குள் செல்ல விடாமல் நிலத்தடி நீரை பெருக விடாமல் தடுக்கும்.எனவே கடந்த ஜனவரி 1ம் தேதி முதல்   தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடைசெய்துள்ளது. இதில் உணவு பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், மேஜைமீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித டம்டளர், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மகோல் டம்ளர்கள், தண்ணீர் பாக்கெட், ஸ்ட்ராவ், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைபகள், கேரி பேக்குகள் எந்த அளவு, எந்த தடிமனாக இருந்தாலும் பயன்படுத்த கூடாது. நெய்யாத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடிகளை தடை செய்துள்ளனர்.

நகர் பகுதிகளில் அதிகாரிகள் குழு திடீர் சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனால் கிராமப்புற பகுதிகளை யாரும் கண்டுகொண்டதாக  தெரியவில்லை. உள்ளாட்சி அதிகாரிகளும் முறையாக ஓட்டல் உரிமையாளர்கள், கடைக்காரர்கள் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. இதனால் வழக்கமாக பயன்பாடு கிராமப்புறங்களில் உள்ளன. ஓட்டல்களில் எப்போதும் போல் பிளாஸ்டிக் கேரி பை மற்றும் பிளாஸ்டிக் பைகளில் உணவுகளை வழங்கி வருகின்றனர். ஒருசில இடங்களில் தடை, மற்ற இடங்களில் பயன்பாடு என இருந்தால் தடை விதித்தும் பயனற்று போய் விடும் என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED சுற்றுச்சுவர் அமைக்காததால் சமூக...