போலீசாருக்கு கத்திக்குத்து

தொண்டி, ஜன.20: தொண்டி அண்ணா நகரில் வீதியில் நின்று சண்டை போட்டவர்களை போலீசார், ஸ்டேசனுக்கு அழைத்த போது போலீசாரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியரை தேடி வருகின்றனர்.தொண்டி அண்ணா நகர் பகுதியில் வீதியில் நின்று கண்ணன் மற்றும் பழனி இருவரும் சண்டை போட்டுள்ளனர். அங்கு வந்த போலீசார் இருவரையும் விசாரணைக்காக ஸ்டேசனுக்கு அழைத்த போது, கண்ணன் கத்தியால் போலீஸ்காரர் விஜய் என்பவரின் உதட்டில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கண்ணனை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்