திருப்பாலைக்குடியில் சாலையின் நடுவே ஆபத்தான மின் கம்பம்

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.20: திருப்பாலைக்குடி மெயின் ரோட்டின் நடுவில் உள்ள மின் கம்பத்தால் காத்திருக்கும் ஆபத்தால், மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள திருப்பாலைக்குடியில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பிரிந்து பேருந்து நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலையின் நடுவில் இரும்பு கம்பத்தால் ஆன மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பம் நடுரோட்டில் உள்ளதால் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து ஊருக்குள் திரும்பி வரும் வாகனங்களும், ஊருக்குள் இருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு வரும் வாகனங்களும் மிகுந்த சிரமத்துடன் ரோட்டை கடக்க வேண்டியுள்ளது.

புதிதாக ஊருக்கு வரும் வாகன ஒட்டிகளுக்கு இந்த மின்கம்பம் இருப்பது தெரியாமல் சில நேரங்களில் விபத்து ஏற்பட்டு விடுகின்றது. இனிவரும் காலங்களில் பெரிய அளவில் ஏதேனும் விபத்து நடந்து உயிர் பலி மற்றும் பொருள் சேதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்கு ஏதுவாக, மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுத்து நடுரோட்டில் அமைந்துள்ள மின் கம்பத்தை அகற்றி விட்டு போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வேறு ஒரு இடத்தில் நட வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பாம்பன் நகர் பகுதியில் ஆபத்தான மின் கம்பம் அதிகாரிகள் கவனிப்பார்களா?