வேலூர் அருகே வாலிபரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல்வாடகை வீட்டு உரிமையாளர் கைது

வேலூர், ஜன.20: வேலூர் அருகே வாலிபரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த வாடகை வீட்டு உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். வேலூர் அருகே கருகம்பத்தூர் அரசமரத் தெருவைச் சேர்ந்தவர் சுமதி. இவர் அதே தெருவைச் சேர்ந்த கோபி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இந்நிலையில், கோபி கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமதியிடம் வாடகை பணத்தை கேட்டாராம். அப்போது சுமதி இரண்டு நாட்களில் வாடகை பணத்தை கொடுப்பதாக கூறினாராம். அதனை ஏற்க மறுத்த கோபி, சுமதியை அவதூறாக பேசினாராம்.

Advertising
Advertising

இதனை அறிந்து அதேபகுதியைச் சேர்ந்த சுமதியின் உறவினரான தர், கோபியை தட்டிக் கேட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த கோபி, தரின் இடது தோளில் கத்தியால் குத்தி கிழித்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் படுகாயமடைந்த தரை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தர் நேற்றுமுன்தினம் விரிஞ்சிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து கோபியை கைது செய்தனர்.

Related Stories: