வேலூர் வருவாய் கோட்டத்தில் நடைபெறும் காளைவிடும் விழாவை கண்காணிக்க நடுநிலை தணிக்கை குழுவினர் நியமனம் கலெக்டர் தகவல்

வேலூர், ஜன.20: வேலூர் வருவாய் கோட்டத்தில் நடைபெறும் காளைவிடும் விழாவை கண்காணிக்க நடுநிலை தணிக்கை குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகை முன்னிட்டு வேலூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களிலும் காளைவிடும் திருவிழா நடந்து வருகிறது. இந்நிலையில், காளை விடும் விழாவில் பங்கேற்கும் காளைகள் துன்புறுத்தப்படுகிறதா? என்பதை பார்வையிடவும், தமிழ்நாடு மிருகவதை தடுப்பு விதிகள் 2017-ன்படி, அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை முன்னரே நடுநிலை தணிக்கை குழுவினர் தணிக்கை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், என்று உத்தரவிடப்பட்டுள்ளது. காளைவிடும் விழாவிற்கான முடிவு அறிக்கையை பெற்று சமர்பிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் நடைபெறும் காளைவிடும் விழாவை கண்காணிக்க தணிக்கை குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். காட்பாடி முதன்மைக் கல்வி அலுவலர்(ஓய்வு) சிவசுப்பிரமணியன் தலைவராகவும், ரெட்கிராஸ் சங்கம் ஜனார்த்தனன் செயலாளராகவும், விலங்குகள் நல ஆர்வலர்கள் சாரதி, வீரச்சந்திரன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: