உலக சைக்கிள் தினம் கடைபிடிப்பு

வருசநாடு, ஜன.20: உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு, வருசநாடு அருகே உள்ள தும்மக்குண்டு கிராமத்தில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.இப்பேரணிக்கு தும்மக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் பொன்னழகு சின்னகாளை தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஊராட்சி செயலர் சின்னசாமி முன்னிலை வகித்தார். இதில் தூய்மை காவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர் இதேபோன்று தும்மகுண்டு, வண்டியூர், வீரசின்னம்மாள்புரம், காமராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.


மேலசிந்தலைசேரியில் பிட் இந்தியா சார்பில் உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. கோம்பை அருகே மேலசிந்தலைசேரி கிராம ஊராட்சியில் பிட் இந்தியா சார்பில் உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சைக்கிள் தினத்தை கொண்டாடும் வகையில், பேரணியை ஊராட்சி தலைவர் ராஜன் தொடங்கி வைத்தார்.

Tags : World Bicycle Day ,
× RELATED உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி உலக சைக்கிள் தினம் கொண்டாட்டம்