வாலிபரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

கே.வி.குப்பம், ஜன.20: கே.வி.குப்பம் தாலுகா லத்தேரி பகுதியில் காணும் பொங்கல் விழா நடந்தது. அப்போது, அங்கு பைக்கில் குடிபோதையில் வந்த லத்தேரி காலனி பகுதியை சேர்ந்த வாலிபர்கள் தமிழரசன், விஜய், விக்னேஷ், சக்திவேல் ஆகியோர் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் அவர்களிடம் கேட்டனர். அப்போது, குடிபோதையில் அங்கிருந்த கோபியும் வாலிபர்களிடம் தட்டிக்கேட்டாராம்.

Advertising
Advertising

இதில், ஆத்திரமடைந்த 4 வாலிபர்கள் கோபியை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினர். இதில், சக்திவேல் என்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து அங்குள்ள அரச மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து வந்த லத்தேரி போலீசார் சக்திவேலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மரத்தில் கட்டி வைத்து சக்திவேலை தாக்கியதாக பொதுமக்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செயது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: