உயர் மின்அழுத்தத்தால் 50 வீடுகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் சேதம்

குடியாத்தம், ஜன.20: குடியாத்தம் அருகே உயர்மின்அழுத்தத்தால் 50 வீடுகளில் இயங்கி கொண்டிருந்த எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமடைந்தது. குடியாத்தம் அடுத்த ரயில்வே ஸ்டேஷன் நிலையம் அருகில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் இயங்கிக்கொண்டிருந்த டிவி, டியூப்லைட், வாஷிங் மெஷின், பிரிட்ஜ் ஆகியவை திடீரென வெடித்து புகை கிளம்பியது.

Advertising
Advertising

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி பார்த்தபோது, ரயில்வே நிலையம் பகுதி உள்ள அனைத்து வீடு மற்றும் தெருக்களில் எரிந்து கொண்டிருந்த மின் விளக்கு அணைந்து இருட்டாக காணப்பட்டது. பின்னர், தகவலறிந்த குடியாத்தம் மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது உயர் மின் அழுத்தம் காரணமாக மின்னணுப் பொருட்கள் சேதமாகி இருக்கலாம் என தெரிவித்தனர். பின்னர், மின்சார கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின் கம்பியை சரி செய்தன. பழுதான எலக்ட்ரானிக் பொருட்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: