கோஷ்டி மோதல் 4பேர் மீது வழக்கு

சாத்தான்குளம், ஜன. 20: சாத்தான்குளம் அருகே பொங்கல் வாசகம் எழுதுவது தொடர்பாக ஏற்பட்ட மோத ல் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட 4பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். சாத்தான்குளம் அருகேயுள்ள சாமிதோப்பில் அம்மன் கோயிலில் பொங்கல் பண்டிகையையொட்டி கோயில் முன் இளைஞர்கள், வாழ்த்து வாசகம் எழுதும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அடப்புவிளை நடுத்தெரு லிங்கப்பாண்டி மகன் மகேஷ், தர்மராஜ் மகன் ஜீவாமுத்துலிங்கம் ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது. இருதரப்பினரும் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக இரு தரப்பினரும் போலீசில் புகார் அளித்தனர். மகேஷ் புகாரின்பேரில் ஜீவாமுத்துலிங்கம், சேகர் மகன் நோபுள்(25) ஆகியோர் மீதும் ஜீவாமுத்துலிங்கம் புகாரின் பேரில் மகேஷ், அவரது சகோதரர் சுந்தர்(23) ஆகியோர் மீதும் தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: