சாதனையாளர்களுக்கு விருது

தூத்துக்குடி, ஜன.20: தூத்துக்குடியில் நடந்த பாரம்பரிய கலைவிழா நிறைவு நிகழ்ச்சியில் பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு கனிமொழி எம்பி விருது வழங்கினார்.

தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக்கலைகளை ஒன்றிணைக்கும் வகையில் ‘தமிழன்டா’ கிராமிய கலைவிழா தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3நாட்கள் நடந்தது. முதல் நாள் விழாவினை, கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். தமிழ் பண்பாடு மேம்பாட்டு மைய தலைவர் ஜெகஜீவன் முன்னிலை வகித்தார்.
Advertising
Advertising

பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகளை தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பி பிரகாசும், பாரம்பரிய உணவுத்திருவிழாவை புறநகர் டி.எஸ்.பி கலைக்கதிரவனும் தொடங்கி வைத்தனர். விழாவில், எஸ்.பி, அருண்பாலகோபாலன் பரிசு வழங்கினார்.

 இறுதிநாள் விழாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.  விழாவில் கனிமொழி எம்.பி., கலந்துகொண்டு பல்வேறு துறையிலும் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இதில், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, கின்ஸ் அகாடமி நிறுவனர் பேச்சிமுத்து, வக்கீல்கள் செல்வம் கிறிஸ்டோபர், ரமேஷ் பாண்டியன், ஜெபசிங், சமூக ஆர்வலர் ராஜா, திருமணிராஜா, ஜெயபால், ஓய்வுபெற்ற ஆசிரியர் குப்புசாமி, முத்துலெட்சுமி, பேராசிரியர்கள் சங்கர், தினகரன், ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: