தூத்துக்குடியில் ஜன.25ல் பேரணி

தூத்துக்குடி, ஜன.20:  தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் காயல்பட்டினத்தில், மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமையில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் தமீம் அன்சாரி, மாவட்ட செயலாளர் அஸாருதீன், பொருளாளர் நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச்செயலாளர் ஹஸன் சைபுதீன் வரவேற்றார். கூட்டத்தில், மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் தமிழகம் முழுவதும் வரும் 25ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று மாவட்ட கலெக்டரிடம் ‘குடியுரிமை சட்டத்தை ரத்து செய்திட வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கை மனு கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.

 இதன்படி, தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி பைபாஸ் சந்திப்பில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்துவது. பேரணியின் முடிவில், மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுப்பது. பேரணியில், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மட்டுமல்லாமல் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரானவர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்றிடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 இதில், மருத்துவஅணி செயலாளர் ரஷீத்காமில், மாணவரணி செயலாளர் அப்ரிடி, கிளை நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மாவட்ட துணை செயலாளர் இமாம்பரீது நன்றி கூறினார்.

Related Stories: