×

தூத்துக்குடி மாவட்ட பாஜ தலைவர் தேர்வு

தூத்துக்குடி, ஜன.20: தூத்துக்குடி மாவட்ட பாஜ தலைவராக பால்ராஜ் தேர்வு செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்ட பாஜ தலைவர் தேர்வு தொடர்பான கூட்டம் அழகேசபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் மாநில துணை தலைவர் சுப.நாகராஜன், மாநில செயலாளர் பொன் பாலகணபதி, மாநில தேர்தல் அலுவலர் திருமலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு புதிய மாவட்ட தலைவர் தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டனர்.

இதில் பி.எம்.பால்ராஜ் போட்டியின்றி மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி,  தேசிய பொதுக்குழு உறுப்பினர் சந்தனகுமார், கோட்ட அமைப்பு செயலாளர் ராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் சிவராமன், மாவட்ட செயலாளர் சிவமுருக ஆதித்தன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய மாவட்ட தலைவர் பால்ராஜிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Thoothukudi district ,BJP ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்...