தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது

தூத்துக்குடி,ஜன.20: தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி வடக்கு வாணியன்விளையை சேர்ந்தவர் ஜேக்கப்(60). ஹோட்டல் ஊழியரான இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி அண்ணாநகர் 12 வது தெரு பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அண்ணாநகரை சேர்ந்த சப்பாணிமுத்து மகன் கண்ணபிரான்(21), ராஜகோபால்நகரை சேர்ந்த லட்சுமணன் என்ற மாக்கான் லட்சுமணன்(37) மற்றும் நயினார் தாஸ் மகன் சின்னதுரை(39) ஆகிய 3 பேரும் வழிமறித்து பணம் தருமாறு மிரட்டியுள்ளனர்.  ஜேக்கப் பணம் தர மறுத்ததால் 3 பேரும் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இதில் கண்ணபிரான் மற்றும் லட்சுமணன் மீது சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: