பிரகாசபுரம் பிரகாசியம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சாத்தான்குளம், ஜன.20: பிரகாசபுரம் பிரகாசியம்மாள் ஆலய திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாள் காலை 8மணிக்கு திருப்பலி, ஜெபமாலை,  சொக்கன்குடியிருப்பு பங்குதந்தை லியோன் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. நாங்குனேரி அருள்தந்தை அந்தோணிராஜா மறையுரை வழங்கினார். மாலை 6மணிக்கு  ஜெபமாலை. மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது.

 8ம் நாளான 24ம் தேதி வரை தினமும் திருப்பலி, மறையுரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 9ம் நாளான 25ம் தேதி மாலை 6மணிக்கு அருள்தந்தைகள் தூத்துக்குடி நாபார்ட், வள்ளியூர் சகாய ஸ்டீபன், தோப்புவிளை செல்வரத்தினம் ஆகியோர்  தலைமையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை பவனி நடக்கிறது. இரவு 9மணிக்கு அன்னையின் சப்பரபவனி நடக்கிறது.

10ம் நாளான 26ம் தேதி காலை 6.30 மணிக்கு அருள்தந்தைகள் வள்ளியூர் சகாய ஸ்டீபன், நாங்குனேரி அந்தோணி ராஜா தலைமையில் ஜெபமாலை, திருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது. 10 மணிக்கு ஞானஸ்தானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு  நாளான 27ம் தேதி 7.30 மணிக்கு ஜெபமாலை, நன்றித்திருப்பலி, 2 மணிக்கு பொது அசன விருந்து, இரவு 9 மணிக்கு ஞானசவுந்திரி பக்தி நாடகம், கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குதந்தை சலேட்ஜெரால்டு தலைமையில் பங்குமக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: