பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

உடன்குடி, ஜன. 20: பரமன்குறிச்சி அருகே உள்ள மறவன்விளையில் திமுக சார்பில் பொங்கல்  விளையாட்டு போட்டி நடந்தது.  திமுக ஊராட்சி செயலாளர் இளங்கோ தலைமை வகித்தார். இதில்  பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், பரிசுகள்  வழங்கினார்.  நிகழ்ச்சியில் பரமன்குறிச்சி ஊராட்சி செயலாளர் இளங்கோ,  மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ்,  ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர்  செந்தில், சீயோன்நகர் பிரதிநிதி கணேசன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  ஏற்பாடுகளை மறவன்விளை செயலாளர் கணேசன் மற்றும் ஊர் பொதுமக்கள்  செய்திருந்தனர்.

Advertising
Advertising

நாசரேத் அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தது. பேய்க்குளம் முத்துராமன் தலைமை வகித்தார். சிறார்கள், பெண்கள் மற்றும் பெரியவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆழ்வார்திருநகரி ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜ் நாராயணன், நாசரேத் நகர செயலாளர் கிங்சிலி, ஒன்றிய ஜெ. பேரவை முன்னாள் செயலாளர் ஞானையா, அரசை கணேசன், மற்றும் அதிமுக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

உடன்குடி பெருமாள்புரம் திருவள்ளுவர் நற்பணி மன்றத்தின் 30வது ஆண்டு விழாவையொட்டி கோலப்போட்டி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. ஓய்வுபெற்ற மின் பொறியாளர் இளையபெருமாள் தலைமை வகித்தார். மன்ற நிர்வாகிகள் சுந்தரவேல், ஆகாஷ் வரவேற்றனர். ஊர் துணை தலைவர் அலெக்சாண்டர், பாலன், மதன்ராஜ், முகேஷ்பிரபு, பூபேஷ்குமார், விக்னேஷ்பிரபு, அஜய் கோடிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரமேஷ்கோபால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் ராதிகாகுமார், ஒலிம்பிக் தீபமேற்றி விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு பெருமாள்புரம் ஊர் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பாஜ மாவட்ட செயலர் சிவமுருகன்ஆதித்தன் பங்கேற்று கோலம், விளையாட்டு, கலைநிகழ்ச்சிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். ஏற்பாடுகளை திருவள்ளுவர் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: