கஞ்சா விற்ற 3பேர் கைது

ஸ்பிக்நகர், ஜன.20:  முத்தையாபுரம் குமாரசாமிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3பேரை பிடித்து விசாரணை நடத்தி சோதனையிட்டனர். அப்போது அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள், முத்தையாபுரம் ஆனந்தநகர் சைவதுரைமகன் உமையராஜ் (25), பாரதிநகர் சண்முகவேல் மகன் வெங்கடேஷ்பாலாஜி (27), கிருஷ்ணாநகர் சண்முக சுந்தரம் மகன் கருவேல்குமார் (25) என்பது தெரியவந்தது. 3 பேரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா சப்ளை செய்த முத்தையாபுரம் தொப்புளான் என்பவரை தேடிவருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: