சலூன் கடைக்காரரிடம் ரூ.30 ஆயிரம் பறித்தவர் கைது

திருச்செந்தூர், ஜன.20: திருச்செந்தூர் அருகே சலூன் கடைக்காரரிடம் ரூ.30 ஆயிரத்தை வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்செந்தூர் அருகேயுள்ள ராணிமகாராஜபுரம் மேலத்தெருவைச் சேர்ந்த ஞானசிகாமணி மகன் தனசேகர்(42). இவர் சண்முகபுரத்தில் சலூன்கடை நடத்தி வருகிறார். கடந்த 17ம் தேதி தனசேகர்,  அவரது தம்பி தேவசகாயம் ஆகியோர் பரமன்குறிச்சியைச் சேர்ந்த  பக்தவச்சலத்திடம் வீடு கட்டுவதற்காக ரூ.30 ஆயிரம் வாங்கி கொண்டு வந்து ெகாண்டிருந்தனர். மணக்காடுகிருஷ்ணாநகர் இடையே தளவாய்புரம் விலக்கு ரோட்டில் உள்ள தரைபாலம் அருகே வந்தபோது அடைக்கலாபுரம் மேலத்தெருவைச் சேர்ந்த சேகர் மகன் ஜான்மகேஷ்(35), பிலோமிநகர் சங்கர் மகன் லிங்கராஜ் ஆகியோர் தனசேகரை வழிமறித்து அவரிடம்  இருந்து ரூ.30 ஆயிரத்தை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்து தனசேகர் திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துராமன் விசாரணை நடத்தி ஜான்மகேஷை கைது செய்தனர். அவரிடமிருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய லிங்கராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>