அதிமுக ஆலோசனை கூட்டம்

வி.கே.புரம், ஜன. 20:  வி.கே.புரத்தில் நகர அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகரச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். முன்னாள் நகரச் செயலாளர் ராஜதுரை, சிங்கை அருண், எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணைச் செயலாளர் பொன்னுச்சாமி,  எம்ஜிஆர் மன்ற முன்னாள் நகரச் செயலாளர் முனியசாமி முன்னிலை வகித்தனர். பேச்சாளர் மீனட்சிசுந்தரம் வரவேற்றார். கூட்டத்தில் காலியாக உள்ள மதுரா கோட்ஸ் அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் தேர்ந்தெடுக்கும் வரை நகரச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து அக்குழு மூலம் தொழிற்சங்க உறுப்பினர்களில் ஒருவரை செயலாளராக தேர்வு செய்வது. அவரை முருகையாபாண்டியன் எம்எல்ஏ மூலம் கட்சி மேலிடத்திற்கு  பரிந்துரைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ சக்திவேல்முருகன் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் எம்ஜிஆர் மன்ற நகரச் செயலாளர் சுப்பையா, நகர துணைச் செயலாளர் பத்மாவதி, முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ், ஆபிரகாம், வார்டு செயலாளர்கள் குட்டிதங்கராஜ், குஞ்சுபாலு, கிட்டு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Intellectual Advisory Meeting ,
× RELATED அதிமுக ஆலோசனை கூட்டம்