கல்லூரி மாணவி தற்கொலை

சுரண்டை, ஜன.20:   சாம்பவர் வடகரை அருகே  கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  சாம்பவர்வடகரை அருகே  திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த மாரியப்பன் மகள் சிவசங்கரி (18).இவர் குற்றாலத்தில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்து வந்த சாம்பவர்வடகரை போலீசார் உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து சாம்பவர்வடகரை எஸ்.ஐ செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : College student suicide ,
× RELATED சேர்ந்தமரம் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு