வீரவநல்லூர், ஜன.20: சேரன்மகாதேவி மேலதெற்கு தெருவைச் சேர்ந்தவர் அழகு மகன் குமார்(36), பால் வியாபாரி. இவரை நேற்று முன்தினம் ராமசாமி கோயில் அருகில் மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். படுகாயமடைந்த குமாருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேரன்மகாதேவி போலீசார் வழக்குபதிந்து சம்பவ பகுதியில் சிசிடிவி கேமராவில் பதிவான தடயங்களை ஆய்வு செய்தனர். அப்போது சம்பவம் நடந்த நேரத்தில் அவ்வழியாக 20 வயதிற்குட்பட்ட 4 பேர் ஓடுவது தெரியவந்தது. இதை முக்கிய ஆதாரமாக கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த திருக்கார்த்திகை அன்று கொழுந்துமாமலை முருகன் கோயிலில் நடந்த அன்னதானத்தில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.