பொங்கல் விளையாட்டு விழா

சுரண்டை, ஜன. 20:  சுரண்டை நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள்  விழா மற்றும் தை பொங்கல் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.

 அதிமுக நகரச் செயலாளர் வி.கே.எஸ் சக்திவேல் தலைமை வகித்தார். ஜெயப்பிரகாசம், தேனம்மாள் தங்கராஜ்,  சந்திரன், கடற்கரை நாடார், ஞானசேகர், குட்டி ராஜ், முருகன், மாரியப்பன் முன்னிலை வகித்தனர். ஜெ பேரவை நகரத் தலைவர் ஜவகர் தங்கம் வரவேற்றார்.  இதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கோகிலா, அழகுமாரி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

விழாவில் வெள்ளைச்சாமி, பாலமுருகன், சிவா, பேச்சி முத்துப்பாண்டியன், செல்லத்துரை, தனுஷ்கோடி, சண்முகம், துரை நாடார், சிவராமகிருஷ்ணன், வேலாயுதம், ஆனந்த், சரவணன், கோபால், மாரி, தங்கச்சாமி, முருகன் உள்ளிட்ட நகர நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மாரிகுமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை  ஒருங்கிணைப்பாளர் ஜவகர் தங்கம் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தென்காசி: தென்காசியில் வீட்டுவசதி வாரிய மக்கள் நலச்சங்கம் சார்பில் முதலாமாண்டு பொங்கல் மற்றும் விளையாட்டு விழா நடந்தது. விழாவிற்கு சங்க தலைவர் சுந்தர் தலைமை வகித்தார். செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பொருளாளர் பிரம்மநாயகம் வரவேற்றார். விழாவில் தனுஷ் எம்.குமார் எம்.பி. சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைத்து போட்டிளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். திமுக நகர செயலாளர் சாதிர், மாவட்ட மருத்துவரணி துணை அமைப்பாளர் டாக்டர் மாரிமுத்து, வக்கீல்கள் முருகன், ரகுமான்சாதத், மாவட்ட பிரதிநிதி பாலா, காஜா, கஜேந்திரன், பால்ராஜ், ஷேக்பரீத், வெங்கடேஷ், இசக்கித்துரை, கட்டியப்பா, அருணாசலம், சரஸ்வதி, சுப்பிரமணியன், மணிமாறன், அஷ்ரப்அலி, பட்டாணி, மஜீத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

களக்காடு: களக்காடு நாடார் புதுத்தெருவில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி  சிறுவர், சிறுமிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து  120 கிலோ எடை கொண்ட இளவட்டக் கல் தூக்கும் போட்டி நடந்தது. இதில் ஆர்வத்துடன் இளைஞர்கள் பங்கேற்று இளவட்டக் கல்லை தூக்கினர். இதே போல பெண்களும்  உரல்களை தூக்கி அசத்தினர். பின்னர் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது.  போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலப்பத்தையில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் பொங்கல்  விளையாட்டு போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு களக்காடு  நகர காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், அமமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகர்,  பரிசுகள் வழங்கிப் பாராட்டினர். விழாவில் விக்னேஸ்வரன், செல்வம், ஜோதி சுபா உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடந்த சமத்துவ  பொங்கல் விழாவுக்கு பள்ளிச் செயலாளர் திலகவதி தலைமை வகித்தார் . முதல்வர் பழனிசெல்வம் வரவேற்றார். இதையொட்டி சமத்துவப் பொங்கலிட்டு வழிபட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் பாரம்பரியமிக்க முறம், நாழி, மரச்சாமான்களால் ஆன பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. நிர்வாக இயக்குநர் ராஜேஸ் கண்ணா நன்றி கூறினார்

Related Stories: