குருவிகுளத்தில் திமுக கொடியேற்று விழா

திருவேங்கடம், ஜன.20: குருவிகுளத்தில் ஊராட்சி திமுகவின் சார்பில்  கொடியேற்று விழா நடந்தது. குருவிகுளம் ஊராட்சி செயலாளர் செந்தில் தலைமை வகித்து திமுக கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை,  மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளருமான பாலசுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை  ஊராட்சி செயலாளர் செந்தில் செய்திருந்தார்.

Related Stories: